Thursday, 20 February 2014

நாயக்கர்

நாயக்கர்

ஆந்திரா, கர்நாடகா, தமிழ் நாடு , கேரளா போன்ற தென் மாநிலங்களில் காணப்படும் ஆரியரல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களே நாயக்கர் இனத்தவர்கள். இவர்களின் தாய் மொழி தெலுங்கு . இவர்கள் தென்மாநிலங்களில் மக்கள் தொகையில் அதிகமாக காணப்படுகிறார்கள். இவர்கள் ஆதியில் காப்பு என்னும் இனத்தை சேர்ந்தவர்கள். காம்பு எனப்படும் பழங்குடி இனத்தவர்களின் மரபுகளாக அறியபடுகிரார்கள் . இவர்களே நாகர்கள் என்றும் இம்மக்கள் கூறுகிறார்கள்.
நாயுடு , நாயக்கர் , ரெட்டி , ராவ் , ராயர் , செட்டே, உடையார் , ராயுடு என்ற பலபெயர்களில் இவர்கள் வாழுகிறார்கள் . தமிழகத்தை பொறுத்தவரையில் கொங்கு நாடில் நாமக்கல் , திருப்பூர் , கோயம்புத்தூர் , சேலம் , ஈரோடு , கரூர் போன்ற பகுதிகளிலும் , தெற்கு பகுதியில் விருதுநகர் , மதுரை , திண்டுக்கல் , தேனீ , ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற பகுதிகளிலும் , செஞ்சி , தஞ்சை , சென்னை , திருவள்ளூர் போன்ற இடங்களிலும் கணிசமாக வாழுகிறார்கள்.
நாயக்கர்களில் காப்பு இனத்தை சேர்ந்தவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் , திருமலை நாயக்கர் , ராணி மங்கம்மாள், கோபாலசாமி நாயக்கர் போன்ற அரசர்கள் தங்கள் இனத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர் .

சொல்லிலக்கணம்


    நாயக்கர்= தலைவன், வீரன், தந்தை, அனைத்திலும் முதல்வன் , உயர்ந்தவன் என்று பல பொருள் படும்
    நாயக்கடு=( தெலுங்கில் "நாயுடு " என்று ஆனது )
    நாயக்கர்=நாயர் ( மலையாளம் )
    நாயக்கர்=நாயகே( சிங்களம் )
    நாயக்கர்=நாயக்( மராத்தி)
    நாயக்கர்=நாயக்ஸ், பட்டநாயக் ( ஒரிசா)

பிரிவுகள்


    காப்பு
    பலிஜா
    கவரா
    தொட்டிய நாயக்கர்
    முத்தரைய நாயக்கர்

காப்பு

ஆந்திராவில் வழங்கப்படும் பெயர் . இவர்கள் முன்னேறிய சாதிகள் பிரிவில் உள்ளனர் , உயர் சாதியினராக கருதபடுகிறார்கள். காப்பு என்பதற்கு காவல் என்று பொருள் . இம்மக்கள் அரசர்களாக இருந்ததால் இவர்களை காப்பு என்று அழைப்பர் . காப்பு என்றால் காவல் காப்பவர் .

பலிஜா

பலிஜா என்பதற்கு பலம் பொருந்தியவர்கள் என்றும், வாணிகம் செய்தவர்கள் என்றும் இருவேறு பொருள் கூறுகிறார்கள் . இம்மக்கள் பெரும்பாலும் வணிகம் சார்ந்தே வாழுகிறார்கள் . இவர்கள் தென் நாடு முழுவதும் வாழுகிறார்கள் . கவரா , வளையல் நாயக்கர், வடுகர் என்பது பலிஜாவின் கிளை ஜாதியினர் .

தொட்டிய நாயக்கர்

தொட்டிய என்றால் பெரிய என்று தெலுங்கில் பொருள் . காப்பு இனத்திலேயே பழங்குடியினர்கள் . தாங்கள் "கம்பளம்" என்ற நாட்டில் இருந்து வந்ததால் தங்களை ராஜ கம்பளத்தார் என்றும் அழைத்து கொள்கிறார்கள் . இம்மக்களே 90 லட்சம் பேருக்கு மேல் தமிழகத்தில் வாழுகிறார்கள் . இவர்கள் தமிழ் கலந்த ஒரு விதமான ஆதி தெலுங்கை பேசுவர் . வீரபாண்டிய கட்டபொம்மன் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்தவரே .

இவர்கள் பலிஜா வின் கிளை ஜாதியினர் . இம்மகள் தங்களுக்கு என்று ஒரு கட்டுபாட்டை வைத்துக் கொள்வர், ஊர் பெரியவர் தான் இம்மக்களுக்கு குரு , இவரை "ஊர் நாயக்கர்" என்று அழைப்பர் . இவர்கள் கல்வி அறிவில் பின் தங்கி உள்ளனர் .

தொட்டிய நாயகர்களின் கிளை

தொட்டிய நாயக்கர்கள் தங்களை ஒன்பது குலங்களாக பிரித்து தங்கள் குலங்களுக்கு உள்ளாகவே திருமணம் செய்து கொள்வர். அந்த ஒன்பது கம்பளங்கள்:

    சில்லவார்
    கொல்லவார்
    தொக்கலவார்( முதாவுலுவார்)
    குரு சில்லவார்
    பாலவார்(பாளையகார்)
    பெல்லவார்
    மல்லவார்
    எற சில்லவார்
    மேகலவார்


இது இம்மக்களின் ஒன்பது குலங்கள். ஒன்பது குலத்தவரும் சேர்ந்து ராஜ கம்பளம் என்று தங்களை அழைத்து கொள்வர் .

குல தெய்வம்


பலிஜா

ரேணுகா அம்மா, எல்லம்மா , கனகம்மா , மீனாக்ஷி அம்மா , திருமால் , மல்லன்னா , அங்கம்மா , நாகம்மா போன்ற தெய்வங்களை குல தெய்வங்களாக வணங்குவர் .

கவரா

அழகர் சாமி , சின்னம்மா , சென்னம்மா , மங்கம்மா போன்ற தெய்வங்களை குல தெய்வமாக கொள்வர் .

ராஜ கம்பளத்தார்

ஜக்கம்மா இவர்களின் இஷ்ட மற்றும் குல தெய்வம் , பொம்மன்னா, பொம்மக்கா , வீர சின்னையா , மல்லையா போன்ற தெய்வங்களை வணங்குவர் .

பலிஜா , கவரா , ராஜ கம்பளம் சமுதாயத்தினர் தங்கள் முன்னோர்களை கடவுளாக வணங்கும் வழக்கம் உடையவர்கள் . போரில் இறந்தவர்கள் , தங்களுக்கு உதவிய ஏனைய சமுதாயதினரையே வணங்கும் பழக்கம் கொண்டவர்கள்.

திருமணத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வு


    இவர்களின் திருமணத்தில் வரதட்சணை கிடையாது.
    மணமகன் வீட்டினர் தான் திருமண நிகழ்ச்சியை நடத்துவர்.
    பழைய பழக்க வழக்கம் எதனையும் இன்று வரை இம்மக்கள் பெரும்பாலும் விடுவதில்லை .
    மணமகன் மணமகளுக்கு காசு கொடுத்து தான் திருமணம் செய்ய முடியும்.

குழந்தைப் பேறு

இம்மக்கள் பொதுவாக அதிக மக்களை பெறும் வழக்கம் உடையவர்கள். இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் குல தெய்வ பெயரையே வைப்பர். தற்போது நாகரிக மக்கள் குல பெயரையும் வைத்துக் கொண்டு , வெளியில் இன்னொரு பெயரையும் வைத்துக் கொள்கிறார்கள் .

உஞ்சல் ஆடுவது என்ற சடங்கை மேற்கொள்கிறார்கள் , இது பிள்ளை பிறந்து மூன்றாவது மாதத்தில் நடத்தப்படும் , அதில் குழந்தைகளின் எதிர் காலம் எவ்வாறாக நடை பெற வேண்டும் என்றும் , தங்கள் குல பெருமை , வீரக்கதை முதலிய வற்றை தெலுங்கில் பாடுகிறார்கள். ஒரு வருடத்தில் மொட்டை இடும் பழக்கம் ஏனைய சமுதாயத்தவர்களை போல இவர்களிடமும் உள்ளது. தங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று கிடா வெட்டி , பொங்கல் வைத்து , முடி இறக்கி , தாய் மாமனை கவுரவித்து அவருக்கு கப்பம் கட்டி சாமி கும்பிடும் பழக்கமும் இவர்களிடம் உள்ளது.

இறப்பு சடங்கு

சுடுகாடு வரையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கம் இவர்களிடம் உள்ளது . இதற்கு பல காரணம் சொல்கிறார்கள் அக்கால கட்டத்தில் கம்பளத்து சமுதாய மக்களால் சதி என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்ததாலும் , பெண்களை மதித்து அவர்களும் சுடுகாடு வரை வரலாம் என்றும் பல்வேறு கருத்துக்கள் சொல்ல படுகிறது . இவர்களின் உடல் எரிக்க படும் , இறந்த மூன்றாம் நாள் நடுக்கல் நடுவர் . நடுக்கலில் அம்மக்களின் பெயர் , பிறந்த மற்றும் இறந்த செய்தி மற்றும் அவர்கள் செய்த சாதனை பொறிக்க படும் .

மொட்டையிடும் பழக்கம் இம்மக்களுக்கு இல்லை, அதே போல இறப்பு நிகழ்வில் பெரும்பாலும் அழுவது கிடையாது . தேவேந்திர குல வெள்ளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இம்மக்களின் இறப்பில் வந்து ஒப்பாரி வைத்து அழுவர். தற்போது இந்த நடைமுறை மாறி வருகிறது. அதே போல இவர்களின் இறுதி ஊர்வலம் மிக ஆடம்பரமாக நடக்கும் , பறை மேளம் , உரிம்மி , உடுக்கை , பம்பை போன்ற இசைக் கருவிகள் இசைக்க , முன்னே பொய் கால் குதிரை , மயிலாட்டம் , போன்றவை ஆடிக்கொண்டு இறப்பு நிகழ்ச்சியை கூட இம்மக்கள் விமரிசையாக நடத்துவர். சாவுக்கு மொய் எழுதும் வழக்கமும் இவர்களுக்கு உண்டு.

சமுதாயத்தினர் நிலை


நூறு வருடம் முன்பு வரை
ஜமின்தாரர்களாகவும் , செல்வந்தர்களாகவும் , அரசர்களாகவும் , குறுநில மன்னர்களாகவும் நூறு ஆண்டு முன்பு வரை இருந்து வந்த இந்த சமுதாயம் , ஆங்கிலேயர்களை எதிர்த்ததால் இவர்களின் சொத்துகள் அனைத்தும் ஆங்கிலேயர்களால் அபகரிக்க பட்டது. பாளையக்காரர்களாக இம்மக்கள் இருந்து உள்ளனர் , பெரும்பாலான பாளையங்கள் ராஜ கம்பளத்தார் சமுதாயதாலையே ஆளப்பட்டுள்ளது .அதில் குறிப்பிட கூடியவை ( பாஞ்சாலங்குறிச்சி , எட்டயபுரம் , போடிநாயக்கனூர் , திண்டுக்கல் போன்ற 72 பாளயங்களுள் 62 பாளையங்கள் இம்மக்களால் ஆளப்பட்டு உள்ளன. இவர்கள் விடுதலை போராட்டத்துக்காக பல உயிர்களை இழந்து உள்ளனர்.  கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் ஆதிக்க சாதியினராக இருந்து வந்து உள்ளனர்.

இன்றைய நிலை

பொருளாதாரத்தில், கல்வியில் பின் தங்கியே உள்ளனர். தற்போது இட ஒதிக்கீடு போன்ற சலுகைகளால் ஒரு அளவுக்கு படித்து அரசாங்க , தனியார் வேலைகளில் உள்ளனர் . இருந்தாலும் மொத்த சமுதாயத்தை பார்க்கையில் கல்வி அறிவில் பின் தங்கியே உள்ளனர். சிலர் குறி சொல்வது போன்ற தொழில்களிலும் , பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே மேற்கொள்கிறார்கள். பெரும்பாலான மக்கள் விவசாய நிலம் கொண்டவர்களாகவே உள்ளனர் என்பதால் விவசாயம் இவர்களின் முக்கிய தொழில் , ராணுவம் , காவல் துறை போன்ற வற்றிலும் இம்மக்கள் அதிக அளவில் உள்ளனர்.

No comments:

Post a Comment