கம்பளம் என்ற நாட்டில் இருந்து வந்ததால் கம்பளத்தார் என்று ஆனார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் தங்களை தொட்டிய நாயக்கர் என்றும் அழைத்து கொள்கிறார்கள்.1850 இல் நடத்தப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ் அல்லாத தெலுங்கு மொழியை பேச கூடியவர்களில் மக்கள் தொகையில் இவ்வினத்தவர்கள் அதிகம் இருந்து வந்து உள்ளனர். இவர்கள் முகமதியர் படை எடுப்பின் காரணமாக தமிழகம் வந்ததாக கூறபடுகிறது. இவர்கள் அதிகம் கரிசல் நில பகுதிகளிலும், மலை சார்ந்த பகுதிகளிலும் குடியேறினர். 16 ஆம் நூற்றாண்டில் பெரும்பான்மை மக்கள் வடக்கு , மேற்கு திண்டுக்கல் பகுதிகளில் அதிகம் குடியேறினர்.வார்ப்புரு:Pg no - 9மதுரையை 16 நூற்றாண்டில் இருந்து நாயக்கர்கள் ஆண்டு வந்ததால், பெரும்பான்மையான பாளையங்களில் கம்பளத்து சமுதாய மக்களே ஆண்டு உள்ளனர். இவர்கள் மதுரை கசட்டுகளில் tottiyans, kappiliyan போன்ற ஜாதிகளாக குறிப்பிட்டு உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் தனித்தே வாழும் பழக்கம் கொண்டவர்களாக இருந்து வந்து உள்ளனர் எனவே பிற ஜாதியினரை தங்கள் பகுதிகளில் அனுமதிக்காமல் வாழ்ந்து வந்து உள்ளனர் .இவர்கள் வேட்டையாடுவது, சேவல் சண்டை விடுவது போன்றவற்றில் பொழுது போக்கி வந்து உள்ளதாக குறிப்புகளில் பதிய பட்டுள்ளது. இவர்கள் வைணவ வழிபாட்டை விரும்புபவர்கள். உடன் கட்டை ஏறும் வழக்கமும் இம்மக்களிடம் இருந்து வந்து உள்ளது, தற்போது அது இவர்களால் கடை பிடிப்பது கிடையாது. இவர்கள் தங்கள் சுக, துக்கங்கள் அனைத்தையும் கடவுளிடம் பாடல் மூலம் முறையிடும் வழக்கம் கொண்டவர்களாக இருந்து வந்து உள்ளனர். வீரர்களாக தங்களை அடையாள படுத்தி கொள்வர் என்றும் கூறபடுகிறது.பிராமணர்களை எந்த நிகழ்சிகளிலும் இவர்கள் அழைப்பது கிடையாது மாறாக தங்கள் இனத்திலேயே பெரியவரை - தலைவரை தேர்ந்து எடுப்பார், இவரே இம்மக்களின் திருமணம் முதலிய சடங்கை செய்து விப்பார். இவரை கோடாங்கி நாயக்கர் என்றும் ஊர் நாயக்கர் என்றும் அழைகிறார்கள். இம்மக்கள் பெரும்பான்மையான பாளையங்களை ஆண்டு வந்து உள்ளனர். பாளைய முறை :ஆந்திராவின் தற்போதைய தெலங்கானாவில் ககதிய பேரரசுகளால் பாளைய முறை ஏற்பட்டது என்று ஒரு சில வரலாற்று அறிஞ்சர்கள் கூறுகிறார்கள். இருந்தாலும் விஜயநகர பேரரசுகளில் முக்கியமான அரசரான குமார கம்பனனால் கி.பி 1336 -. கி.பி. 1378 மதுரையை பிடித்து, அவ்வாரே கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு என்று துங்கபத்ரா நதிக்கரைக்கு தெற்கில் உள்ள அனைத்து பகுதியையும் தன் வசம் கொண்டு வந்து விரிந்த சமஸ்தானத்தை ஏற்படத்தி கொண்டார். விரிந்த பெரிய சமஸ்தானமாக இருந்து வந்ததால் சிறு சிறு நாடுகளாக பிரித்து அரசாங்க வசதிக்காக அமைத்து கொண்டார். இதுவே பின்னாளில் " விசுவநாத நாயக்கரின் " மந்திரியாக இருந்த " அரியநாத முதலியால் " 72 பாளையங்களாக மதுரையை மையமாக கொண்டு பிரிக்க பட்டன. இது பின்னாளில் அனைத்து பகுதிகளிலும் அமலாக்க பட்டு 200 பாளையம் வரை பிரிக்க பட்டுள்ளன. பாளையத்தை ஆண்டவர்கள் " பாளையக்காரர்கள் " என்று அழைக்க பட்டனர். குறிப்பிடும் பாளையங்கள் ::பாஞ்சாலங்குறிச்சி - வீரபாண்டிய கட்டபொம்மன், எட்டயபுரம் - எட்டப்பன், திண்டுக்கல் - கோபாலசாமி நாயக்கர், தீர்த்தகிரி - சின்னமலை நாயக்கர்களின் ஆட்சி காலம் நடைபெற்றதால் பெரும்பாலான பாளையங்கள் ராஜ கம்பளம் சமுதாய மக்களால் ஆளப்பட்டுள்ளது .வார்ப்புரு:Pg no: 11- 16 மதுரையை மையமாக கொண்டு பிரிக்க பட்ட 72 பாளையங்களில் - கம்பளத்தார்கள் பாளையங்கள் :
1. வேங்கடபதி நாயுடு - அனந்தபூர் 2. மதகரி நாயக்கா - சித்திரை துர்கா 3. ராஜ வெங்கடப்ப நாயக்கா- சுரப்பூர் 4. உய்யலவாடா நரசிம்ம ரெட்டி - கர்னூல்
1. ஏற்ர சக்க நாயக்கனூர் - கந்தப்ப நாயக்கர்
2. தேவாரம்
3. போடிநாயக்கனூர் - திருமலை போடி நாயக்கர்
4. பாஞ்சாலங்குறிச்சி - வீரபாண்டிய கட்ட பொம்மு நாயக்கர்
5. பேரையூர் - பரத பாண்டியர் நாயக்கர்
6. எட்டயபுரம் - ஜெகவீர பாண்டிய எட்டப்ப நாயக்கர்
7. சாப்டூர்
8. கடவூர் - முத்தையா நாயக்கர் Ex. MLA
9. தெப்பம்பட்டி
10. அம்மைய நாயக்கனூர் - கத்திற நாயக்கர்
11. அம்பாத்துரை - மோபால நாயக்கர்
12. தவசு மடை - சுடலை நாயக்கர்
13. எம்மகலாபுரம்
14. மாரநாடு - சின்ன அழகிரி நாயக்கர்
15. மதூர்- வேங்கடசாமி நாயக்கர்
16. சொக்கம் பட்டி - பள்ளமுத்து நாயக்கர்
17. ஏற்றியோடு - முத்து குமாரவேலு வெல்ல கொண்டாம நாயக்கர்
18. பள்ளியப்பா நாயக்கனூர் - பள்ளியப்பா நாயக்கர்
19. இடைய கோட்டை - மம்பார நாயக்கர்
20. மம்பாரா - சக்காராம் தொம்ம நாயக்கர்
21. பழனி - வேலையாத நாயக்கர்
22. ஆயக்குடி - கொண்டாம நாயக்கர்
23. விருபாக்ஷி - குப்பால நாயக்கர்
24. கன்னிவாடி - ஆண்டியப்ப நாயக்கர்
25. நாகலாபுரம் - சவுந்துர பாண்டிய நாயக்கர்
26. எதிலப்பா நாயக்கன் பட்டி - தளி எதிலப்பா நாயக்கர்
27. காடல்குடி
28. குளத்தூர்
29. மேல்மாந்தை
30. ஆற்றங்கரை
31. கோலார்பட்டி
32. ஊற்றுமலை ஜமின்
33. தொட்டப்ப நாயக்கனூர்
34. கம்பம்
35. காசியூர்
36. வாராப்பூர்
37. ஆத்திப்பட்டி
38. கண்டவநாயக்கனூர்
39. தும்பிச்சி நாயக்கனூர்
40. நத்தம்
41. சக்கந்தி
42. பெரியகுளம்
43. மதுவார்பட்டி
44. கோம்பை
45. வடகரை
46. மலயபட்டி
47. ரோசலை பட்டி
48. படமாத்தூர்
49. எழுமலை
50. சுரண்டை
51. நிலகோட்டை
52. முள்ளியூர்
53. கொடிக்குளம்
54. இலுப்பையூர்
55. சந்தையூர்
56. கீழபட்டி
200 பாளையங்களாக மாற்ற பட்ட போது :
கருநாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வற்றையும் இணைத்தஉடன் 200 பாளையங்களாக பிரிக்க பட்டது. அதில் கருநாடக பெரும்பான்மை பகுதிகள் போயர் என்று சொல்ல படுகின்ற ஒட்டர் இனத்தவர்களால் ஆளப்பட்டது , சில பாளையங்கள் காப்பு இனத்தவர்களாலும் ஆளப்பட்டது. ஆந்திராவில் பெரும்பான்மை காப்பு இனத்தவர்களால் ஆளப்பட்டது, சில பகுதியை ரெட்டி இனத்தவரும் ஆண்டுள்ளனர். தமிழகத்தை பொருத்த வரையில் பெரும்பான்மையாக கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்களால் ஆளப்பட்டுள்ளது. 6 பாளையங்கள் மறவர் இனத்தவரும், 5 பாளையங்கள் கள்ளர் இனத்தாலும், 5 கவுண்டர் சமுதாயத்தினராலும், ஒரு பாளையத்தை முதலியார் சமுதாயத்தினரும், வேடர் ( முத்தரையர் ) மக்கள் 2 பாளையங்களிலும், வன்னியர்( தேவரில் ஒரு பிரிவை சார்ந்தவர்கள் ) 3 பாளையங்களிலும், ரெட்டியார் இனத்தவர்கள் 14 பாளையங்களிலும், 100க்கும் மேற்பட்ட பாளையங்கள் கம்பளத்தார் இனத்தை சேர்ந்தவர்களால் ஆளப்பட்டுள்ளன.
கிழக்கு பகுதி
1. பூச்சிய நாயக்கர் 2. லேக்கையா நாயக்கர் 3. காமைய நாயக்கர் 4. லிங்கமா நாயக்கர் 5. முத்தையா நாயக்கர் 6. வல்ல கொண்டாம நாயக்கர் 7. சாமைய நாயக்கர் 8. அம்மையா நாயக்கர் 9. அப்பையா நாயக்கர் 10. குலப்பா நாயக்கர் 11. புசில்லி நாயக்கர்
மத்திய பகுதி
1. ரெண்கப்பா நாயக்கர் 2. ராமச்சந்திரா நாயக்கர் 3. வடமராசு நாயக்கர் 4. தேப்பளு ராசு 5. முத்தையா நாயக்கர்
வடக்குகாப்பு எனப்படும் கிளை சாதியினர் ஆண்ட பகுதி
1. காளகஸ்தி - சென்னப்ப நாயக்கர் 2. சந்திரகிரி - புளிசிரிலா நாயிநிகாரு 3. சித்தூர் - சென்ன அங்கம்மா நாயுடு 4. வீரபலி - சிவராம நாயுடு
ஆந்திரா
1. வேங்கடபதி நாயுடு - அனந்தபூர் 2. மதகரி நாயக்கா - சித்திரை துர்கா 3. ராஜ வெங்கடப்ப நாயக்கா- சுரப்பூர் 4. உய்யலவாடா நரசிம்ம ரெட்டி - கர்னூல்
No comments:
Post a Comment