Monday, 17 February 2014

தொட்டிய நாயக்கர்

தமிழ்நாட்டில் சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தொட்டிய நாயக்கர் வசித்து வருகின்றனர்.தெலுங்கு மொழி பேசும் இவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இந்த சாதியினர் ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர் என்ற உட்பிரிவுகளின் பெயரிலும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தற்போது ராஜகம்பளம் என்கிற பெயரையே தங்கள் சாதிப் பெயராகப் பயன்படுத்தி வருகின்றனர்.இவர்கள் ஆந்திராவில் மிக பெரிய சமுதாயமான காப்பு இனத்தவர்களின் கிளை சாதியினராக கருதபடுகிறார்கள் . பலிஜா, கவரா , வளையல் நாயக்கர் , தொட்டிய நாயக்கர் போன்றோர் காப்பு இனத்தில் உள்ள கிளை ஜாதியினர்.

வீட்டு வகைப் பிரிவுகள்
ராஜகம்பளத்தார்களின் உட்பிரிவுகள் 10 வீட்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவர்கள் பெரும்பாலும், குறிப்பிட்ட உட்பிரிவுகளுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இர்ரி வீட்டு வகை
1.கண்ணடிர்ரி
2.தாத்திர்ரி
3.போற்றிர்ரி
4.கூசமிர்ரி
5.பாசமிர்ரி
6.பந்திர்ரி
7.ஏமிர்ரி
8.எனுமிர்ரி
9.நாயிர்ரி

கொடையானி பொம்மு வீட்டு வகை
1.குண்டானி கொடையானி
2.கோட்டண்ண கொடையானி
3.பிதுரண்ண கொடையானி
4.புவ்வுல கொடையானி
5.உக்கம கொடையானி
6.திம்மிசி கொடையானி
7.சில்ல கொடையானி

பாலமண்ண வகை
1.முட பாலம்
2.உண்டாடி பாலம்
3.கட்டாறி பாலம்
4.கெங்கிசி பாலம்
5.காட்டேரி பாலம்
6.சாம பாலம்
7.சல்லூறு பாலம்
8.தூணாக்கோல் பாலம்
9.மல்ல பாலம்
10.குரி பாலம்
11.எகநாகி பாலம்
12.திகநாகி பாலம்

குஜ்ஜ பொம்மு வகை
1.போட பொம்மு
2.பொட்டக பொம்மு
3.பீலி பொம்மு
4.பிக்கா பொம்மு
5.சல்லி பொம்மு
6.குல்லி பொம்மு
7.எரமிசி பொம்மு
8.எரகினி பொம்மு
9.குந்திலி பொம்மு
10.குலகட்ட பொம்மு
11.பங்கு பொம்மு
12.பங்காரு பொம்மு
13.கசிகிலி பொம்மு
14.குசிகிலி பொம்மு

கம்பராஜு வீட்டு வகை
1.கோனண்ண
2.கெத்தண்ண
3.சில் பொம்மு

எரமாசி சின்ன பொம்மு வீட்டுவகை
1.எரமாசி
2.கமண்ண
3.பீரண்ண
4.சக்கிடண்ண
5.கொடுக்கண்ண
6.சருக்கண்ண
7.காட்டண்ண

மங்கராஜு வீட்டு வகை
1.மேக்கலண்ண
2.நல்லிமண்ண

கலிமு சோமு வீட்டு வகை
உட்பிரிவுகள் தெரியவில்லை

குரிமாசி வீட்டு வகை
1.பெத்தொட்டி காட்டையா
2.சிவகாணி பாலப்பா
3.வந்த பாலமுத்து

சில்லண்ண வீட்டு வகை
1.எரசில்ல
2.நலசில்ல
3.பூத்தமசில்ல
4.பூத்தனாகாச்சி சில்லா
5.நாரமுத்து சில்ல
6.தும்பி சில்ல
7.கோண சில்ல
8.உப்பிடி சில்ல
9.பொந்து சில்ல
10.கொடை சில்லா

திருமணம்
இந்த குலத்தினரிடையே, திருமணப் பொருத்தம் பார்க்கும் போது, நேர் சுட்டம் என்ற ஒரு முறை பார்க்கப்படுகிறது. இதன்படி, ஒரு குலத்தவர், அவருக்கு நேர் சுட்டம் இருக்கும் குலத்தினருடன்தான் சம்பந்தம் செய்ய வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. தற்போது, வேறு சுட்டத்தினருடனும் திருமணம் செய்வதும் நடக்கிறது.

இர்ரி மாது - கொடையானி பொம்மு சில்ல
பால சித்து - குஜ்ஜ பொம்மு
கம்பராஜு - எரமாசி சின்ன பொம்மு
மங்கராஜு - கலிமுசோமு
பல்லகதொப்பு - நூட்ட குமாரலு

முதல் நாள்
பசுப்பு கொட்டந்து' மஞ்சள் அரைக்கும் சடங்கு நடக்கும். இதில் ஊரில் உள்ள உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்வர் . உரிமியை மாலாடு என்ற இனத்தவர் இசைப்பார், தெலுங்கு திருமண பாடல்களை பெண்கள் பாடுவார்கள் , உரிமி இசைக்க பாட்டு பாட மஞ்சள் இடிக்கும் ( அரைக்கும் ) சடங்கு நடக்கும்.

இரண்டாம் நாள்
திருமண நாள் முதல் நாளில் தொடங்கிய திருமணம் பல்வேறு சடங்குகளை கொண்டு இரண்டாம் நாளும் நடைபெறும் . திருமணம் இரவு நேரங்களில் தான் நடப்பது இவ்வினதவர்களின் வழக்கம் . திருமணத்தின் பொது பிற இனத்தவர்கள் அனுமதிக்க பட மாட்டார்கள் . ஊரின் மந்தையில் அவரை பூ , அரச மர இலை, வேப்ப மர இலை , புங்கை மர இலை போன்றவற்றில் குடில் அமைப்பர் . மணமகன், மணமகளுக்கு தனி தனி குடில் அமைத்து தேவராட்டம் போன்ற ஆடல்களை ஆடுவர். ஊர் பெரியவர் "சாலி பெத்து முன்னிலையில் தான் திருமணம் நடக்கும். பிராமணர்கள் , ஆரிய சடங்கு முதலியவை இம்மக்களால் இன்றளவும் ஏற்று கொள்ளப்படவில்லை.

இரவு நேரத்தில் தெலுகு மொழியில் பாட்டு பாட, உரிமி இசைக் , பெண்கள் குலவை இட மாலை மாற்றி கொள்வர். தாலி கட்டும் வழக்கம் இம்மக்களிடம் இல்லை , இருந்தாலும் தற்போது வேற்று சமுதாய மக்களின் பார்வைக்காக மஞ்சள் நாணை தற்போது அணிந்து கொள்கிறார்கள் . பெரும்பாலான இடங்களில் மணமகன் தாலி கட்டுவது கிடையாது , அத்தை , நாத்தனார் போன்ற பெண்களே மணமகளுக்கு தாலி கட்டி விடுகிறார்கள். இரவு முழுவதும் தேவராட்டம் தவறாமல் நடைபெறும் , சேவயாட்டம், கும்மி போன்றவையும் இரவு முழுவதும் நடத்துவர்.

அம்மி மிதிப்பது, அருந்ததி பார்ப்பது, மணமகன் மணமகளின் காலில் மெட்டி இடுவது போன்ற எந்த சடங்கும் இவர்களிடம் இல்லை . பெண்ணுக்கு ”ஆசாரி” தான் மெட்டி இடுவார். மணமகன் காலில் மெட்டி இடும் வழக்கம் இவர்களிடம் உள்ளது. திருமணத்தின் போது "வீர வாளை" மணமகன் ஒன்றைக் கையில் வைத்திருப்பார். பெண் தலைக்கு முக்காடு போட்டு கொண்டு இருப்பார், மணமகனுக்கு மார்பில் கவசம் கட்டுவர், தலையில் கங்கணம், எருக்கம் பூ, வேப்பம் பூ போன்றவற்றை கட்டுவர். மணமகன் தலைப்பாகை கட்டி கொண்டும், கவசம் அணிந்து கொண்டும் இருப்பார். பெண் மண்ணால் ஆன குடத்தை தலையில் வைத்திருப்பார். இது இவர்களின் திருமணம் முடியும் வரை கடைப்பிடிக்கும் முறை.

மூன்றாவது நாள்
இது சடங்குகளுக்கான நாள். கம்பளத்து சமுதாய மக்களின் திருமணங்களில் சடங்குகள் நிறைந்ததாக இருக்கும்.

தளவாலு அட்டந்து

ஊரில் உள்ள உறவினர்கள் , சொந்த பந்தம் அனைவரும் மணமக்களுக்கு ஆசி வழங்கும் சடங்கு. ஒரு தட்டில் பால் வெய்து அதனை வெற்றிலை மூலம் தொட்டு மணமக்களின் மேல் தொட்டு உறவினர்கள் ஆசி கொடுப்பார் . இந்த சடங்கு செய்யும் பொது தெலுங்கு மொழியில் தங்கள் குல பெருமைகளையும் , தங்கள் வரலாறுகளையும், தங்கள் குல வீரர்களையும் , தங்கள் குலத்துக்கு உதவி செய்த மற்ற இனத்தவரையும் புகழ்ந்து பாடுவர்.

தேவுடு மொக்கந்து - கடவுளை வணங்குவது

இந்த சடங்கில் தங்கள் குல தெய்வங்களையும் , முனோர்களையும் உரிமையோடு அழைப்பர் . இவர்களின் நம்பிக்கை படி தாங்கள் கடவுளின் பிள்ளைகள் என்றும் , தாங்கள் சொன்னால் பழிக்கும் என்றும் , தாங்கள் அழைத்தால் கடவுளே வருவர் என்று கூறி உரிமையோடும், அதிகாரத்தோடும் கடவுளை அழைத்து மணமக்களை வாழ்த்த சொல்வர்.

குச்சிலு போந்து- குடிலுக்கு செல்வது

மரங்களால் வேயப்பட்ட குடிலில் மணமகன் , மணமகளுக்கு விளையாட்டு முதலிய வற்றை செய்து உற்சாக படுவர் . பரிசு பொருள்களை பிறருக்கு கொடுத்து மகிழ்வர் . இவர்களின் திருமணம் ஆதி மக்கள் செய்த முறையில் நடக்கும்.

திருமண விருந்து
இவர்களின் திருமண விருந்து பெரும்பாலும் அசைவ உணவு வகைகளைக் கொண்டிருக்கும்.

நல்ல நேரம் , கெட்ட நேரம்
நல்ல நேரம், கெட்ட நேரம், ஜாதகம் பார்க்கும் முறை எதனையும் இம்மக்கள் செய்வது இல்லை. இதுபோல் திருமணம் பகல், இரவு என அவர்களுக்கு ஏற்ற நேரத்தைத் தேர்வு செய்து கொள்கிறார்கள். மணமக்கள் தங்கள் இனத்தில் காதல் செய்தால் அதனை இவர்கள் ஏற்று கொள்கிறார்கள். பிற சாதிகளில் காதல் கொண்டால் அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை என்பதுடன் அவர்கள் இறந்து விட்டதாகக் கொண்டு இறந்தவருக்குச் செய்யும் சடங்குகளைச் செய்து அவர்களை ஒதுக்கி விட்டுவிடும் வழக்கமும் உள்ளது.

திருமணத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வு
இவர்களின் திருமணத்தில் வரதட்சணை கிடையாது.
மணமகன் வீட்டினர்தான் திருமண நிகழ்ச்சியை நடத்துவர்
பழைய பழக்க வழக்கங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
மணமகன் மணமகளுக்கு காசு கொடுத்துதான் திருமணம் செய்ய முடியும்.
கம்பளத்து நாயக்கர்கள் பிராமணர்களைக் கொண்டு திருமணம் செய்வது இல்லை, திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விடுவதில்லை என்பதையும் சாதி வினோதங்கள் என்ற பாரதியாரின் கட்டுரையிலே குறிப்பிடுகிறார்.

குழந்தைப்பிறப்பும் சடங்குகளும்
இவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில் ஆர்வம் கொள்வதில்லை. இதற்கு இவர்களின் சாதிக் கட்டுப்பாடுகள்தான் காரணமாக இருக்கிறது. இவர்கள் குழந்தைகளுக்கு குல தெய்வப் பெயரை முதல் பெயராக வைத்துக் கொள்கின்றனர். வெளிப்பழக்கத்திற்கென புதுப் பெயர்களை இரண்டாம் பெயராக வைத்துக் கொள்கின்றனர்.

ஊஞ்சல் ஆட்டம்
குழந்தை பிறந்த மூன்றாம் மாதத்தில் ஊஞ்சல் ஆட்டம் எனும் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. இதில் குழந்தைகளில் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்காக குலப் பெருமை, வீரக்கதை போன்றவற்றை தெலுங்கில் பாடலாகப் பாடுகிறார்கள். குழந்தைக்கு ஒரு வயதில் மொட்டை இடும் பழக்கம் பிற சாதியினரைப் போல் இவர்களிடமும் உள்ளது. குல தெய்வக் கோவிலுக்கு சென்று ஆடு, சேவல் பலியிட்டு, பொங்கல் வைத்து, குழந்தைக்கு மொட்டையிட்டு, குழந்தையின் தாய் மாமனைச் சிறப்பித்து அவருக்குக் கப்பம் பணம் செலுத்தி அதன் பிறகு தெய்வ வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது.

இறப்பு சடங்கு
சுடுகாடு வரையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கம் இவர்களிடம் உள்ளது. இதற்கு பல காரணம் சொல்கிறார்கள் அக்கால கட்டத்தில் கம்பளத்து சமுதாய மக்களால் சதி என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்ததாலும், பெண்களை மதித்து அவர்களும் சுடுகாடு வரை வரலாம் என்றும் பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகிறது. இவர்களின் உடல் எரிக்கப்படும். இறந்த மூன்றாம் நாள் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் நடுக்கல் நடுகின்றனர். இந்த நடுக்கலில் அவரின் பெயர், பிறந்த மற்றும் இறந்த நாள் குறித்த தகவல் அவர்கள் செய்த சாதனை போன்ற தகவல்களும் இடம் பெறுகிறது.(இது வசதியானவர்களுக்கு மட்டுமா?)

பிற சாதிகளில், இறந்தவர்களின் பிள்ளைகள் மொட்டை போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளது. இவர்களிடம் இவ்வழக்கம் இல்லை. அதே போல இறப்பு நிகழ்வில் பெரும்பாலும் இவர்கள் அழுவது கிடையாது. தேவேந்திர குல வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இம்மக்களின் இறப்பில் வந்து ஒப்பாரி வைத்து அழுவர்.[மேற்கோள் தேவை] தற்போது இந்த நடைமுறை மாறி வருகிறது. அதே போல இவர்களின் இறுதி ஊர்வலம் மிக ஆடம்பரமாக நடக்கும் , பறை மேளம், உருமி, உடுக்கை, பம்பை போன்ற இசைக்கருவிகள் இசைக்க, முன்னே பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், போன்றவை ஆடிக்கொண்டு இறப்பு நிகழ்ச்சியை கூட இம்மக்கள் விமரிசையாக நடத்துவர். இறப்புக்கு மொய் எழுதும் வழக்கம் இவர்களிடம் உள்ளது.

சமுதாயத்தினர் நிலை
நூறு வருடங்களுக்கு முன்பு
ஜமின் தாரர்களாகவும், செல்வந்தர்களாகவும், அரசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும் நூறு ஆண்டு முன்பு வரை இருந்து வந்த இந்த சாதியினர், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் அதற்கான உரிமைகளை இழந்தனர்.[4] . குறுநிலப் பகுதிகளை ஆட்சி செய்து வந்த பாளையக்காரர்களாக இச்சாதியைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். தமிழ்நாட்டின் தென் பகுதியிலிருந்த 72 பாளையங்களில் 62 பாளையங்கள் இச்சாதியினர் தலைமையில் இருந்துள்ளனர்.(Census of India, 1961: Madras)இவர்கள் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் விடுதலைப் போராட்டத்துக்காக பல போராட்டங்களின் பங்கு பெற்றுள்ளனர். கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் ஆதிக்க சாதியினராக இருந்து வந்து உள்ளனர்.

இன்றைய நிலை
பொருளாதாரம் மற்றும் கல்வியில் பின் தங்கிய நிலையிலுள்ள இவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியிலில் இடம் பெற்றுள்ளனர். இட ஒதிக்கீடு சலுகைகளால் சிலர் கல்வி பெற்றுள்ளனர். இருப்பினும் இவர்கள் இன்னும் கல்வி நிலையில் பின் தங்கியே உள்ளனர். பொருளாதாரத்திலும் முன்னேற்றம் என்பது குறைவுதான். இச்சாதியினர் விவசாயத்தையே முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். சிலர் குறி சொல்வது போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

குல தெய்வங்கள்
ராஜகம்பளம் சாதியினர் தங்களின் குல தெய்வங்களாக கீழ்காணும் தெய்வங்களை வழிபடுகின்றனர்.

1.இர்ரி காணி-கெண்டு காட்டம்மா
2.கொடையானி பொம்மு-பேரவாடி அக்ககாரு
3.பாலவநாகு-பல்லகொண்ட கண்ணகாரு
4.குஜ்ஜபொம்மு-வெல்லக்குஞ்சர பொம்மையசாமி
5.கம்பராஜு-ரங்கநாதர்
6.எரமாசி -காமாட்சியம்மன்
7.மங்கராஜு-கெட்டவைய்ய
8.கலிமிசோமு-டத்தலூட்டி கண்ணகாரு
9.பல்லகாணி-லகுவம்மா
10.குரிமாசி-பைட்டம்ம
11.சில்லண்ண-சீப்பாலம்ம
இவ்வாறாக இவர்கள் குல தெய்வங்களை வழிபட்டாலும் ஜக்கம்மா தேவி , பொம்மக்கா போன்ற தெய்வத்தினை சாதியின் பொது தெய்வமாகக் கொண்டுள்ளனர்.

குழு வாழ்க்கை
இந்த சாதியினர் ஒரு குழுவாகத் தங்களுக்கென ஒரு பகுதியை உருவாக்கிக் கொண்டு அங்கு தனியாக வசித்து வந்தனர். இதனால் இவர்கள் பிற சாதியினரை தங்கள் ஊருக்குள் அனுமதிக்காமல் இருந்து வந்தனர். இச்சாதிப் பெண்களை மாத விலக்கு காலத்தில் ஊரின் ஒரு பகுதியில் தனியாகத் தனிமைப்படுத்தி வைக்கும் வழக்கமும் இச்சாதியினரிடம் இருந்தது. தற்போது இந்த நிலை மாறியுள்ளது. கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இவர்கள் அக மண முறையை தீவீரமாகப் பின்பற்றுகின்றனர்.

தேவராட்டம்
இச்சமுதாயத்தினர் தேவராட்டம் எனும் ஒரு வகை நடனம் ஆடுகின்றனர். இவர்கள் வீட்டு விழாக்களில் இந்த நடனம் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது.

No comments:

Post a Comment